September 6 2008

log.gifசரவாக் வழியாக இந்தோனேசிய வெட்டுமரங்கள் கள்ளக்கடத்தல் செய்யப்படுவதாகக் கூறப்படும் புதிய குற்றச்சாட்டை ஆராயும் வரை மலேசியாவுடனான வெட்டுமரத்திற்கான பேச்சுக்களை தாமதப்படுத்துமாறு புருனோ மேன்செர் பண்ட் (BMF) ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்டுள்ளது. இன்னும் படிக்க




ahmad2.jpgஇனத்துவேசமான  கருத்துகளுக்காக அகமட் இஸ்மாயில் மன்னிப்பு கேட்க தொடர்ந்து மறுத்தால், அந்த அம்னோ தொகுதி தலைவருடனான தொடர்புகளை   புக்கிட் பெண்டேரா கெராக்கான் தொகுதி  துண்டித்துக் கொள்ளும் என்று கெராக்கான் கட்சி இன்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

“நமக்கும் அகமட் இஸ்மாயிலுக்கும் இனி எதுவும் கிடையாது. ஒத்த குணமுள்ள மலேசியர்களும் இதையே செய்ய வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்,” என  பினாங்கு கெராக்கான் செயலாளர் டாக்டர் தெங் ஹொக் நான் கடும் சொற்களடங்கிய ஓர் அறிக்கையில் தெரிவித்தார். இன்னும் படிக்க




abd.jpgசெப்டம்பர் 16-ல் புதிய அரசாங்கம் அமையப் போவது திண்ணம் என்று கூறும் குறுஞ் செய்திகள் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் பிரதமர் அது பற்றி சற்றும் கலக்கமின்றி காணப்படுகிறார்.

அவ்விவகாரத்தில் பேரரசருக்குக்கூட அக்கறை இல்லை என்கிறார் அப்துல்லா அகமட் படாவி. இன்னும் படிக்க




najib2.jpgபாரிசான் நேசனல் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பாடு செய்திருக்கும் சுற்றுப்பயணம் ஒரு கல்விச் சுற்றுலாதானே தவிர வேறு ஒன்றுமல்ல என்று துணைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். இன்னும் படிக்க




bbc.jpgதேசிய முன்னணி அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் (பிபிசி) மேற்கொள்ளவிருக்கும் வெளிநாட்டுப் பயணம், செப்டம்பர் 16ல் எதிரணிக்கு தாவும் முயற்சிகளை முறியடிக்கும் திட்டத்தை கொண்டிருக்கவில்லை.  மாறாக “விவசாயத் துறையில் வாய்ப்புகளையும் அறிவையும் பெருக்கும்” நோக்கத்தை கொண்டுள்ளதாக மன்றத் தலைவர் தியொங் கிங் சிங் கூறியுள்ளார். இன்னும் படிக்க




akamad.jpgபுக்கிட் பெண்டேரா அம்னோ தலைவர் அகமட் இஸ்மாயில் சீன சமுதாயத்திற்கு எதிராக இனத்துவேச ரீதியில் உரையாற்றியமைக்கு மன்னிப்புக் கேட்கமாட்டேன் என்ற அவரின் கருத்தை பலப்படுத்தி பினாங்கிலுள்ள 13 அம்னோ பிரிவுகளும் இன்று ஆதரவளித்தனர்.

நேற்று இரவு அனைத்து பிரிவுகளும் விசேடமாக சந்தித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதுடன் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இன்னும் படிக்க




fbe20b5763b60d77ccf0bac432658fe81.jpgமுறைப்படி ஒரு தமிழ்ப்பள்ளிக்குச் சேர வேண்டிய சிலாங்கூர் பண்டார் உத்தாமாவிலுள்ள ஒரு துண்டு நிலத்தை மஇகா வாங்கியுள்ளது என்று சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா கூறுகிறார்.

“இது மஇகா பள்ளிப் பிள்ளைகளிடமிருந்து கொள்ளையடித்த தெளிவான விசயமாகும்”, என்று எப்பிங்காம் தமிழ்ப்பள்ளிக்கு வெளியில் சந்தித்தபோது சிவராசா கூறினார். இன்னும் படிக்க




doctor-osman.gifகுதப் புணர்ச்சி புகாரின் தொடர்பில் முகம்மட் சைபூல் புகாரி அஸ்லானை முதன்முதலில் பரிசோதனை செய்த புஸ்ரவி மருத்துவமனையின் டாக்டர் ஒஸ்மான் அப்துல் ஹமிட், போலீஸ் புகார் செய்யுமாறு சைபூலுக்கு தாம் ஆலோசனை கூறவில்லை என்கிறார். இன்னும் படிக்க




your-say.gifஉங்கள் கருத்து: மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று அகமட் இஸ்மாயில் கூறியிருப்பது பற்றி: இன்னும் படிக்க




drsubra.jpgபண்டார் உத்தாமாவில் தமிழ்ப்பள்ளிக்கூடத்தை அடுத்துள்ள நிலம் மஇகாவுக்குச் சொந்தமானதுதான், அதில் முறைகேடு எதுவும் இல்லை என்கிறார் அக்கட்சி தலைமைச் செயலாளர் எஸ்.சுப்ரமணியம். இன்னும் படிக்க




அடுத்த பக்கம் »